×

பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த இந்திய தூதரக அதிகாரி கைது

லக்னோ: பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த குற்றச்சாட்டில் மாஸ்கோவில் பணியாற்றி வந்த இந்திய தூதரக அதிகாரியை உத்தரபிரதேச பயங்காரவாத தடுப்பு படையினர் கைது செய்துள்ளனர். உத்தரபிரதேசம் ஹபூர் மாவட்டம் ஷாமாஹியுதீன்பூர் கிராமத்தை சேர்ந்தவர் சதேந்திர சிவால். இவர் கடந்த 2021ம் ஆண்டு முதல் ரஷ்யா தலைநகர் மாஸ்கோவில் உள்ள இந்திய தூதரக அலுவலகத்தில் இந்தியாவின் பாதுகாப்பு உதவியாளராக பணியாற்றி வந்தார். இவர் பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐஎஸ்ஐக்கு உளவு பார்ப்பதாக உத்தரபிரதேச பயங்கரவாத தடுப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதன்படி சந்தேகத்தின்பேரில் சதேந்திர சிவலை கைது செய்து விசாரணை நடத்தினர். அப்போது இந்திய அதிகாரிகளிடம் லஞ்சம் கொடுத்து இந்திய ராணுவம் மற்றும் அதன் செயல்பாடுகள், பாகிஸ்தான் எல்லையில் உள்ள இந்திய ராணுவத்தினரின் நிலைகள், ஒன்றிய பாதுகாப்புத்துறை, வௌியுறவுத்துறையின் ரகசிய தகவல்களை பெற்று, அதை பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ உளவு அமைப்பிடம் தெரிவித்ததை ஒப்பு கொண்டார்.
இதையடுத்து சதேந்திர சிவாலை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

The post பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த இந்திய தூதரக அதிகாரி கைது appeared first on Dinakaran.

Tags : Pakistan ,Lucknow ,Uttar Pradesh Anti-Terrorism Squad ,Moscow ,Satendra Siwal ,Shamahiuddinpur ,Hapur district ,Uttar Pradesh ,
× RELATED பாக்.கின் ஃபத்தா-2 ஏவுகணை சோதனை